63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதுச்சேரி மாநிலம் பாகூர் என்னும் பகுதியினை சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற கடலூர் பள்ளிப்பட்டு என்னும் கிராமத்தினை சேர்ந்த சிலம்பரசன்(25) என்னும் வாலிபர் வேலையில் ஈடுபட்டிருந்த மூதாட்டியை கடுமையாக தாக்கி அவரிடமிருந்து பணம், மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டதோடு, மிக கொடூரமாக அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இத்தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அந்த மூதாட்டி பாகூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்திய தண்டனை சட்டப்பிரிவு 376(2)ன்படி தண்டனை
மூதாட்டி அளித்த புகாரின்பேரில் காவல்துறை அந்த வாலிபர் மீது வழக்குபதிவு செய்தனர் என்று கூறப்படுகிறது. மேலும், காவல்துறையினர் அவர் மீது கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். வாலிபர் சிலம்பரசனையும் காவல்துறை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தொடர்ந்து, இதன் மீதான விசாரணை இன்றும்(ஆகஸ்ட்.,29)நடந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி இளவரசன், சிலம்பரசன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்ட்டுள்ளதால், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 376(2)ன்படி, ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபாரதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்