ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி லஞ்சம்: அதிகாரி மீது சிபிஐ வழக்கு
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யனுக்காக ₹25 கோடி செலுத்தாவிட்டால் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கப்படுவார் என்று அவரது குடும்பத்தினர் மிரட்டப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (NCB) முன்னாள் மண்டல இயக்குநர் சமீர் வான்கடே மீது சிபிஐ தாக்கல் செய்த எஃப்ஐஆர் தெரிவித்துள்ளது.
அக்- 2021ல் மும்பைக்கு அப்பால் ஒரு பயணக் கப்பலில் போதைப்பொருள் கடத்தலில் ஆர்யன் கான் & பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த திரு வான்கடே தவிர மற்ற 4 குற்றவாளிகளின் பெயர்கள் FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட ஆர்யன் கானின் குடும்ப உறுப்பினர்களை மிரட்டி, அவர்களிடமிருந்து ₹ 25 கோடியை மிரட்டி பணம் பறிக்க சதி நடந்தாக FIR-ல் கூறப்பட்டுள்ளது.
Aryankhan
வான்கடே வீட்டில் சிபிஐ சோதனை
"இந்தத் தொகை இறுதியாக ₹ 18 கோடிக்கு செட்டில் செய்யப்பட்டது. லஞ்சப் பணமாக ₹ 50 லட்சம் டோக்கன் தொகையை கே.பி. கோசாவி மற்றும் அவரது உதவியாளர் சான்வில் டி'சோசாவும் எடுத்தனர், ஆனால் பின்னர் இந்தத் தொகையின் ஒரு பகுதி ₹ 50 லட்சம் திரும்பக் கொடுக்கப்பட்டது" என்று FIRல் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் வான்கடே வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதில் ₹ 23,000 மற்றும் 4 சொத்து ஆவணங்கள் கிடைத்தன. ஆர்யன் கான் 22 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் NCB அவரை "போதுமான ஆதாரங்கள் இல்லாததால்" குற்றச்சாட்டில் இருந்து விடுவித்தது.