பழங்குடியின பெருவிழாவை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
தேசிய பழங்குடியினர் திருவிழாவான ஆதி மஹோத்சவத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை(பிப் 16) டெல்லியில் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் பழங்குடியினரின் வளமான மற்றும் மாறுபட்ட பாரம்பரியத்தை காட்சிப்படுத்தும். இந்த விழாவில் சுமார் 1000 பழங்குடி கைவினைஞர்கள் பங்கேற்பார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது. இந்த ஆண்டு, பிப்ரவரி 16 முதல் 27 வரை டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினரின் கலாச்சாரம், கைவினைப்பொருட்கள், உணவு வகைகள், வணிகம் மற்றும் பாரம்பரிய கலை ஆகியவற்றை கொண்டாடும் வகையில் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு லிமிடெட்(TRIFED) இதை ஆண்டுதோறும் நடத்துகிறது.