
சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்கள் பதிவு
செய்தி முன்னோட்டம்
சித்த மருத்துவரான ஷர்மிகா என்பவர் கவிழ்ந்து படுத்தால் மார்பகப் புற்றுநோய் வரும், ஒரு குளோப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை கூடி விடும் என்பது போன்ற சர்ச்சையான விஷயங்களை சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவு செய்து வந்தார்.
இதனையடுத்து அவரது இந்த பதிவுகள் தவறான மருத்துவ குறிப்புகள் என்று புகார்கள் எழுந்தது.
இதன் பேரில் அவர் நேரில் ஆஜாராகி தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ இயக்குனரகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து, சித்த மருத்துவர் ஷர்மிகா கடந்த ஜனவரி 24ம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் விசரணைக்காக நேரில் ஆஜராகினார்.
மருத்துவ குறிப்புகள்
இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார்
அப்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சித்த மருத்துவ கவுன்சிலில் நேரில் ஆஜராகி விளக்கமளித்த ஷர்மிகாவிடம் கடந்த பிப்ரவரி 10ம் தேதி எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.
எனினும், அவகாசம் வேண்டும் என்று அவர் சார்பில் கோரப்பட்டதையடுத்து, அவர் விளக்கம் அளிக்க கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்கள் வந்துள்ளதாக தெரிகிறது.
சித்த மருத்துவர் ஷர்மிகாவின் மருத்துவ குறிப்பு வீடியோக்களை பார்த்து செயல்பட்டதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.