Page Loader
சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு விளக்கமளிக்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு விளக்கமளிக்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு விளக்கமளிக்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

எழுதியவர் Nivetha P
Feb 10, 2023
06:45 pm

செய்தி முன்னோட்டம்

சமீபகாலமாக சித்த மருத்துவர் ஷர்மிகா அவர்கள் இணையத்தில் பல வீடியோக்களை பதிவு செய்து வந்தார். அதில் அவரது மருத்துவ குறிப்புகள் தவறானவை என புகார்கள் எழுந்தது. கவிழ்ந்து படுத்தால் மார்பகப் புற்றுநோய் வரும், ஒரு குளோப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை கூடி விடும் என்பது போன்ற சர்ச்சையான விஷயங்களை ஷர்மிகா பதிவு செய்து வந்தார். அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகளையடுத்து 15 நாட்களுக்குள் தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ இயக்குனரகம் சார்பில் முன்னதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி அவர் தனது விளக்கத்தை அளிக்கவேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவகாசம் நீட்டிப்பு

வரும் 24ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க உத்தரவு

இதனை தொடர்ந்து, சித்த மருத்துவர் ஷர்மிகா கடந்த ஜனவரி 24ம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் விசரணைக்காக நேரில் ஆஜராகினார். அப்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சித்த மருத்துவ கவுன்சிலில் நேரில் ஆஜராகி விளக்கமளித்த ஷர்மிகாவிடம் பிப்ரவரி 10ம் தேதி எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க ஷர்மிகாவிற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. எனினும், அவகாசம் வேண்டும் என்று அவர் சார்பில் கோரப்பட்டதையடுத்து, அவர் விளக்கம் அளிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வரும் 24ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.