Page Loader
சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக கல்லூரி அலுவலகத்தில் நேரில் ஆஜர்
சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக நேரில் ஆஜர்

சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக கல்லூரி அலுவலகத்தில் நேரில் ஆஜர்

எழுதியவர் Nivetha P
Jan 24, 2023
03:43 pm

செய்தி முன்னோட்டம்

சமீப காலங்களில் சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வீடியோக்களை பதிவு செய்து வந்தார். அவர் பதிவு செய்து வரும் மருத்துவ குறிப்புகள் தவறானது என்று புகார்கள் எழுந்ததுடன், தொடர்ச்சியாக குற்றச்சாட்டும் வைக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து அவருக்கு இந்திய மருத்துவ ஹோமியோபதி இயக்குனரகம் நோட்டிஸ் ஒன்றினை அவருக்கு அனுப்பியது. அதன்படி அவர் 15 நாட்களுக்குள் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டும். இது குறித்த அறிவிப்பை இந்திய மருத்துவ கவுன்சிலின் தமிழ்நாடு பிரிவு துணை இயக்குனர் பார்த்திபன் கடந்த 9ம் தேதி வெளியிட்டார்.

நேரில் ஆஜர்

சென்னை-சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் ஷர்மிகா ஆஜர்

இதனை தொடர்ந்து, சித்த மருத்துவர் ஷர்மிகா இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி அலுவலகத்தில் விசரணைக்காக நேரில் ஆஜராகியுள்ளார். ஷர்மிகா வழங்கிய குறிப்புகள் சித்த மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டதா, மருத்துவ குறிப்புகள் வழங்குவதற்கு முன்னர் முறைப்படி பதிவு செய்துள்ளாரா, அறிவியல் ஆதாரங்களோடு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதா என்கிற கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சித்த மருத்துவர் ஷர்மிகா கவிழ்ந்து படுத்தால் மார்பகப்புற்றுநோய் வரும், ஒரு குளோப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை கூடி விடும், நம்மைவிட பெரியமிருகம் என்பதால் பீஃப் கறியை சாப்பிட கூடாது போன்ற கருத்துக்களையும், கர்ப்பகாலத்தில் உட்கொள்ள வேண்டிய உணவு பழக்கங்கள் குறித்து தவறான கருத்துக்களையும் பதிவு செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.