Page Loader
15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் இயக்க தடை: அதிரடி அறிவிப்பு
15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை அழிக்க வேண்டும்

15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் இயக்க தடை: அதிரடி அறிவிப்பு

எழுதியவர் Siranjeevi
Jan 21, 2023
03:15 pm

செய்தி முன்னோட்டம்

15 ஆண்டுகள் நிறைவு செய்த வாகனங்களை இயக்க கூடாது எனவும், அவற்றின் உரிமத்தை புதுப்பிக்க கூடாது என மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, பழமையான மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சொந்தமான அரசு வாகனங்களை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பதிவு நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவற்றை அழிக்க வேண்டும் என கூறியுள்ளது. அந்த வாகனங்களான அரசு மற்றும் பொதுத்துறைக்கு சொந்தமான ஜீப்கள், குப்பை வண்டிகள், லாரிகள், குடிநீர் டிராக்டர்கள் என இவைகள் அடங்கும். இந்த விதி ஆனது பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் கவச வாகனங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு, உள்நாட்டு பாதுகாப்பை பராமரிக்கப் பயன்படுத்தப்படும் சிறப்பு நோக்க வாகனங்களுக்கு பொருந்தாது என அறிவித்துள்ளனர்.

வாகனம்

15 ஆண்டு பழமையான அரசு வாகனங்களை அழிக்க வேண்டும்... அரசு அதிரடி

மேலும், கடந்த, 2021-22 யூனியன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த பாலிசியில் தனிப்பட்ட வாகனங்களுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஃபிட்னஸ் டெஸ்ட் செய்யவும், அதே நேரத்தில் வணிக வாகனங்களுக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு ஃபிட்னஸ் டெஸ்ட் செய்வதையும் கட்டாயமாக்குகிறது. இந்த புதிய கொள்கையின் கீழ், பழைய வாகனங்களை ஸ்கிராப்பிங் செய்த பிறகு வாங்கப்படும் புதிய வாகனங்களுக்கு சாலை வரியில் 25% வரை வரி தள்ளுபடியை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்துகளுக்கு, சொந்தமான ஜீப்கள், குப்பை அள்ளும் லாரி மற்றும் வண்டிகள், டிரக், டிராக்டர், குடிநீர் லாரிகள் உள்ளிட்ட அனைத்தும் இதில் அடக்கம்.