Page Loader
உல்லாசமாக துவங்கிய பள்ளி சுற்றுலா, துயரத்தில் முடிந்தது: 14 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த வதோதரா படகு விபத்து
14 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த வதோதரா படகு விபத்து

உல்லாசமாக துவங்கிய பள்ளி சுற்றுலா, துயரத்தில் முடிந்தது: 14 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த வதோதரா படகு விபத்து

எழுதியவர் Venkatalakshmi V
Jan 19, 2024
08:14 am

செய்தி முன்னோட்டம்

நேற்று, குஜராத்தின் வதோதரா அருகே அமைந்துள்ள ஹார்ணி ஏரியில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 14 பேர் மற்றும் உடன் சென்ற 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இந்த துரதிருஷ்ட விபத்தில், உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல். விபத்தில் சிக்கிய படகில் 27 மாணவர்கள் பயணம் செய்ததாக வதோதரா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.கோர் தெரிவித்துள்ளார். நேற்று, ஜனவரி 18ஆம் தேதி, ஹார்ணி ஏரிக்கு பள்ளி மாணவர்கள் சுற்றுலாவிற்கு வந்துள்ளனர். அங்கிருந்த படகில், 27 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணம் செய்துள்ளனர். எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்ததில், 14 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். எனினும், 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

card 2

பாதுகாப்பு குறைபாடா? தவறுக்கு யார் காரணம் என விசாரணை

வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷன் நிலைக்குழுவின் தலைவர் இந்த விபத்து பற்றி கூறுகையில், "படகில் சுமார் 35 பேர் இருந்தனர். ஒருவேளை படகின் அளவை தாண்டி அதிகளவு ஆட்கள் ஏறியிருக்கலாம். இதனால் , படகு சமநிலையை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் படகில் பாதுகாப்பு உபகரணங்கள் (லைஃப் ஜாக்கெட்) எதுவும் இல்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தவறுகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்." விபத்து குறித்து விசாரணை செய்துவரும் அதிகாரிகளும் இதையே தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 அரசு தரப்பில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.