Loading...
புதுடெல்லியில் 12-வது பிரிக்ஸ் பாராளுமன்ற மன்றம் இன்று தொடக்கம்: என்ன அஜெண்டா?
12-வது பிரிக்ஸ் பாராளுமன்ற மன்றம் இன்று தொடக்கம்

புதுடெல்லியில் 12-வது பிரிக்ஸ் பாராளுமன்ற மன்றம் இன்று தொடக்கம்: என்ன அஜெண்டா?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 26, 2026
08:01 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் தலைமையின் கீழ் 12-வது பிரிக்ஸ் பாராளுமன்ற மன்றத்தின் இரண்டு நாள் மாநாடு புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இன்று தொடங்குகிறது. "மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கான பாராளுமன்றங்களை வலுப்படுத்துதல்" என்ற முதன்மைப் பொருண்மையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்க உள்ள நிலையில், முன்னதாக ரஷ்யாவின் 'ஸ்டேட் டூமா' தலைவர் வியாசெஸ்லாவ் வோலோடினுடன் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்படுவது குறித்தும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில், இந்தியா நிரந்தர இடம் பெறுவதற்கு ரஷ்யா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கும் ஓம் பிர்லா நன்றி தெரிவித்தார்.

மாநாட்டின் விவரங்கள்

மாநாட்டின் முக்கிய இலக்குகள் மற்றும் தலைப்புகள்

2026-ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், இம்மாநாட்டில் பின்னடைவுகளைத் தாங்கும் திறன், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகிய நான்கு முக்கிய தலைப்புகளில் உயர்மட்ட விவாதங்கள் நடைபெறவுள்ளன.

மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மனிதநேய முறையில் பயன்படுத்துவது குறித்தும், உறுப்பு நாடுகளிடையே இளம் மற்றும் பெண் எம்பிக்களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

அக்டோபர் 27-ம் தேதியுடன் நிறைவடையும் இம்மாநாட்டில் சர்வதேச விவகாரங்களுக்கான குழுத் தலைவர்களின் சிறப்புக் கூட்டமும் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT