Page Loader
திருப்பதி ஏழுமலையானுக்கு 108 தங்க தாமரைகள் நன்கொடை 
திருப்பதி ஏழுமலையானுக்கு 108 தங்க தாமரைகள் நன்கொடை

திருப்பதி ஏழுமலையானுக்கு 108 தங்க தாமரைகள் நன்கொடை 

எழுதியவர் Nivetha P
Sep 06, 2023
06:39 pm

செய்தி முன்னோட்டம்

ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலான திருப்பதி உலக பிரசித்தி பெற்றது. இங்கு வரும் கோடிக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிப்பது மட்டுமின்றி, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் காணிக்கைகளை செலுத்துவது வழக்கம். ஒவ்வொருவரும் அவர்களால் இயன்ற பணம், வெள்ளி, தங்கம், வைரம் போன்ற பொருட்களை காணிக்கையாக வழங்குவார்கள். இந்நிலையில் ஆந்திரா மாநிலம் கடப்பாவை சேர்ந்த பக்தர் ராஜீவ் என்பவர் லலிதா ஜுவல்லரி நிறுவன தலைவரான கிரண் குமாருடன் இணைந்து திருப்பதி ஏழுமலையானுக்கு 108 தங்க தாமரைகளை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. அதன்படி இந்த தாமரைகள் அனைத்தும் சாமி பாதத்தில் வைத்து பூஜை செய்த பின்னர் கோயிலுள்ள ரங்கநாதர் மண்டபத்தில் வைத்து தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

நன்கொடை