ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2
1951ஆம் ஆண்டில், ஜாலியன் வாலாபாக் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் ஒரு நினைவிடத்தைக் கட்டியது. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து இன்றுடன் 104 வருடங்கள் ஆகிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி அதிகம் அறியப்படாத சில உண்மைகளை தற்போது பார்க்கலாம்: 1. அந்த சமயத்தில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்திருந்தது ஜாலியன் வாலாபாகில் கூடியிருந்த மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. 2. "ஒத்துழைப்பின்மை" காட்டியதற்காக பொதுமக்களை தண்டிக்கும் நோக்கத்தோடு பிரிகேடியர்-ஜெனரல் ரெஜினோல்ட் டயர் ஜாலியன் வாலாபாக்கிற்கு வந்தார். 3. யாரும் அந்த இடத்தை விட்டு ஓடக்கூடாது என்பதற்காக வெளியேறும் பாதையை டயரின் படைகள் சீல் வைத்தது. 4. அதன் பின், ஆயிரக் கணக்கான பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த டயர் உத்தரவிட்டார்.
இந்திய வரலாற்றில் ஒரு இருண்ட நாளாக பார்க்கப்படும் ஜாலியன் வாலாபாக் படுகொலை
5. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், டயரின் படைகள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. வெடிமருந்துகள் தீரும் வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மொத்தமாக 1,650 தோட்டாக்கள் மக்கள் மீது சரமாரியாக பாய்ந்தது. 6. துப்பாக்கிச் சூட்டில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிப்பதற்கு அங்கிருந்த கிணற்றில் விழுந்த சிலரும் உயிரிழந்தனர். 7. ஆங்கிலேயர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பலர் "இன்குலாப் ஜிந்தாபாத்"(புரட்சியே நீண்ட காலம் வாழ்க) என்ற கோஷங்களை எழுப்பி கிணற்றில் குதித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு கிணற்றில் இருந்து 200க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டன. 8. ஜாலியன் வாலாபாக் தோட்டத்தில் வெளியேறுவதற்கு இன்னொரு வழி இருந்திருந்தால் பல உயிர்கள் தப்பித்திருக்கும்.