LOADING...
ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1
இதனால், நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1

எழுதியவர் Sindhuja SM
Apr 13, 2023
10:46 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவை அதிர வைத்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து இன்றுடன் 104 வருடங்கள் ஆகிறது. ஏப்ரல் 13, 1919 அன்று, ரவுலட் சட்டத்திற்கு எதிராக அமிர்தசரஸின் ஜாலியன் வாலாபாக்கில் திரண்டிருந்த ஆயுதம் ஏந்தாத மக்கள் கூட்டத்தின் மீது ஜெனரல் ரெஜினால்ட் டயரின் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த சம்பவத்தின் போது, 400 முதல் 1,000 பேர் வரை கொல்லப்பட்டனர். 1,200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெடிமருந்துகள் தீரும் வரை சுமார் பத்து நிமிடத்திற்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ரவுலட் சட்டம் என்பது பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தால் அதே ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு அடக்குமுறைச் சட்டமாகும். "தேசத்துரோகம்" என்ற அடிப்படையில் எவரையும் விசாரணையின்றி சிறையில் அடைக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு இந்த சட்டம் வழங்கியது.

details

ஜெனரல் டயரால் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கொல்லப்பட்டனர்

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஏப்ரல் 13, 1919 அன்று அந்த சட்டத்தை எதிர்த்து ஜாலியன் வாலாபாக்கில் கூடினர். அதன் பிறகு, டயர் மற்றும் அவரது படைகள் அந்த இடத்தை ஆக்கிரமித்து வெளியேறும் வழியைத் தடுத்தனர். இதனால், நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். சம்பவத்திற்குப் பிறகு, ஜெனரல் டயர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். ஜூலை 23, 1927அன்று பெருமூளை இரத்தப்போக்கு காரணமாக அவர் உயிரிழந்தார். தன் மரண படுக்கையில் இருக்கும் போது டயர், "அமிர்தசரஸின் நிலைமையை அறிந்த பலர் நான் செய்தது சரி என்று கூறுகிறார்கள்... ஆனால் பலர் நான் தவறு செய்தேன் என்று கூறுகிறார்கள். நான் இறக்க விரும்புகிறேன். நான் செய்தது சரியா தவறா என்பதை என் ஆண்டவர் மட்டுமே அறிவார்." என்று கூறி இருக்கிறார்.