கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம்
இன்று காலை கேரளாவின் கலமசேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் தொடர்ந்து நடந்த 3 குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார் என்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. கிறிஸ்தவ குழு ஒன்றின் மாநாட்டு மையத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை 9 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு குறித்த தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளிலும் ஊகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியாகி இருக்கும் வீடியோ காட்சிகளின்படி, சம்பவ இடத்தில ஏரளமான மக்கள் இருந்ததாக தெரிகிறது.