Page Loader
"28.9 % சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்": யுவன் கொந்தளிப்பு 
"குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து சொல்லி தருவது அவசியம்" என கூறியுள்ளார் யுவன்

"28.9 % சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்": யுவன் கொந்தளிப்பு 

எழுதியவர் Venkatalakshmi V
Mar 07, 2024
06:47 pm

செய்தி முன்னோட்டம்

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் இறந்த சம்பவம் குறித்து, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கொந்தளித்து கருத்து பதிவு செய்துள்ளார். தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இது குறித்து பதிவிட்டுள்ள யுவன்,"இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தீராப்பிரச்னையாக இருக்கிறது. 28.9 % சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர். குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து சொல்லி தருவது அவசியம்" என கூறியுள்ளார். அதோடு,"புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதை மருந்து உட்கொண்டிருந்தனர் என தெரியவந்துள்ளது. இது போன்ற பழக்கத்தினால் பல தீமைகளை எதிர்கொள்கிறோம் என்பது புரிகிறது" என கூறியுள்ளார். புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கினை தற்போது சிறப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

embed

Twitter Post

Child sexual abuse in India is a prevalent and devastating issue, with a shocking 28.9% of children experiencing some form of sexual crime. It is very important and crucial to teach children to differentiate btw good touch & bad touch, also it is very important that we embed... pic.twitter.com/dvtznQccXA— Raja yuvan (@thisisysr) March 7, 2024