ஜெயிலர் 2 படத்தை பற்றி முக்கிய அப்டேட் தந்தார் யோகி பாபு
இயக்குனர் நெல்சன் கடைசியாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கிய 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக நெல்சன், 'ஜெயிலர் 2' திரைப்படத்தை இயக்கவுள்ளார் என செய்திகள் வெளியானது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வமாக யாரும் பேசவில்லை. இந்த நிலையில் BOAT பட ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக யோகி பாபு ஒரு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியின் போது, ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருவதை பற்றி பேசியுள்ளார். மேலும், தனக்கு ஏற்ற காமெடி கதாபாத்திரைத்தை நெல்சன் எப்போதும் மெருகேற்றியும், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தருகிறார் என்றார்.