NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் - பிரபல யூடியூபர் இர்பான் சொகுசு கார் பறிமுதல்
    கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் - பிரபல யூடியூபர் இர்பான் சொகுசு கார் பறிமுதல்
    பொழுதுபோக்கு

    கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் - பிரபல யூடியூபர் இர்பான் சொகுசு கார் பறிமுதல்

    எழுதியவர் Nivetha P
    May 30, 2023 | 10:54 pm 1 நிமிட வாசிப்பு
    கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் - பிரபல யூடியூபர் இர்பான் சொகுசு கார் பறிமுதல்
    கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் - பிரபல யூடியூபர் இர்பான் சொகுசு கார் பறிமுதல்

    பிரபல யூடியூபர் இர்பான் 'இர்பான் வியூஸ்' என்னும் சேனல் மூலம் உணவு வகைகளை ரிவியூ செய்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தவர். தற்போது திரை பிரபலங்களுடன் உணவகங்களில் உணவுகளை அருந்தியவாறே நேர்காணலும் செய்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கு மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி இரவுநேரத்தில் புத்தேரி அருகேயுள்ள கோனாதி என்னும் பகுதியினை சேர்ந்தவர் பத்மாவதி(55), தனது மகளை பார்ப்பதற்காக மறைமலை நகருக்கு சென்று வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது மறைமலை நகரின் நகராட்சி அலுவலகம் அருகே சென்னை-திருச்சி நெடுஞ்சாலையினை கடக்க முயன்ற இர்பானின் சொகுசு கார் பத்மாவதி மீது மோதியுள்ளது. இதில் சுமார் 20 அடிக்கு மேல் தூக்கி வீசப்பட்ட பத்மாவதி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    மீண்டும் பரிசோதனைக்கு செல்லும் இர்பானின் சொகுசு கார் 

    இந்த சமபவத்தினையடுத்து இர்பானின் காரை ஓட்டிச்சென்ற அவரது உறவினர் அசாருதீன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே விபத்தின் போது யூடியூபர் இர்பானும் அவரது மனைவியும் காரில் இருந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது சொகுசு காரினை போலீசார் பறிமுதல் செய்து, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரிசோதனைக்காக ஆஜர்படுத்தினர். ஆனால் அந்த காருக்கான முறையான ஆவணங்களை போக்குவரத்து புலனாய்வு போலீசார் கொடுக்காததால் இர்பானின் கார் மீண்டும் காவல் நிலையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போது மீண்டும் இர்பானின் கார் பரிசோதனை செய்யப்படவுள்ளது என்று கூறப்படுகிறது. பரிசோதனை முடிந்த பின்னர் இர்பான் கார் விடுவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கார்

    கார்

    இந்தியாவில் வெளியானது 'மெக்லாரன் ஆர்தூரா' ஹைபிரிட் சூப்பர்கார்! ஆட்டோமொபைல்
    இந்தியாவில் வெளியானது டாடா ஆல்ட்ராஸின் CNG வெர்ஷன்! டாடா மோட்டார்ஸ்
    'Thar' மாடலுடன் புதிய மைல்கல்லை எட்டியது மஹிந்திரா! மஹிந்திரா
    'பெண் சிங்கம்' என்று அழைக்கப்படும் பெண் போலீஸ் கார் விபத்தில் பலி  அசாம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023