LOADING...
தமிழ் சினிமாவின் மர்ம பாடலாசிரியர் ஹைசன்பெர்க் யார்? லோகேஷ் கனகராஜின் கொடுத்த க்ளூ 
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மட்டுமே அவரை அறிந்தவர்கள்

தமிழ் சினிமாவின் மர்ம பாடலாசிரியர் ஹைசன்பெர்க் யார்? லோகேஷ் கனகராஜின் கொடுத்த க்ளூ 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 25, 2025
02:51 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர் - ஹைசன்பெர்க். பெயரால் மட்டுமே அறியப்படுகிறார் இந்த மர்மமான பாடலாசிரியர். ரசிகர்களுக்கும், மீடியாவுக்கும் கூட அவரது உண்மையான அடையாளம் தெரியவில்லை. ஆனால், அவரது பாடல்கள் சூப்பர்ஹிட்: விஜய்யின் 'லியோ'வில் இடம்பெற்ற "Bloody Sweet", ஜூனியர் என்டிஆரின் 'தேவரா: பகுதி 1', ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்தில் ஒரு பாடல் என பல படங்களுக்கு புனைபெயரில் பாடல் வரிகள் எழுதியுள்ளார் இந்த ஹைசன்பெர்க். இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மட்டுமே அவரை நேரில் பார்த்தவர்கள் எனக் கூறப்படுகின்றனர். சமீபத்தில் Galatta Plus ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில் லோகேஷ், "ஹைசன்பெர்க் ஒரு உண்மையான நபர், ரோபோ அல்ல" எனத் தெரிவித்தார்.

ஹின்ட்

பாடலாசிரியர் குறித்து க்ளூ கொடுத்த லோகேஷ்

லோகேஷ் மேலும்,"அவரைப் பற்றி யாரும் தெரிந்து கொள்ளவேண்டாம் என்று நினைக்கிறோம். அதற்காகவே இந்த 'பெயரை' வைத்திருக்கிறோம்," எனத் தெரிவித்தார். தொடர்ந்து மிக முக்கியமாக ஒரு க்ளூ வழங்கினார். அவர் வழங்கிய ஒரு துப்பு, ரசிகர்களை தற்போது தீவிர யூகங்களில் ஈடுபட வைத்துள்ள்ளது. லோகேஷ் கூற்றுப்படி,"நீங்கள் 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தை பார்த்திருந்தால், பதில் உங்களுக்கு தெரியும்" என்றார். அதோடு, ஹைசன்பெர்க் ஒரு புனைப்பெயர் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். முன்னதாக இசையமைப்பாளர் அனிருத்,"நான் அவருடன் தொலைபேசியில் மட்டுமே பேசியிருக்கிறேன். லோகேஷ் மட்டுமே அவரை நேரில் சந்தித்தவர்," என கூறியிருந்தார். இதனால் ஹைசன்பெர்க் யார் என்ற கேள்வி சமூக ஊடகங்களில் வைரலாகி, பலரும் கமல்ஹாசன், நெல்சன், எஸ்.வி. சேகர் உள்ளிட்டோர் பெயர்களை யூகமாக முன்வைத்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post