LCUவின் கடைசி படம் இதுதான்..இணையத்தில் வெளியான புதிய தகவல்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 2019இல் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படத்தை இயக்கியபோது, அது LCUவிற்கான தொடக்கத்தைக் குறித்தது என்று அப்போது யாருக்கும் தெரியாது.
ஏன், லோகேஷ் கூட இதை பற்றி யோசித்திருக்க மாட்டார்.
ஆனால் அப்படத்தின் வெற்றி, அதன் பின்னர் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தில் தான், இது ஒரு தனி பிரபஞ்சமாக உருவெடுத்துள்ளது என்பதை மக்கள் உணர்ந்தனர்.
அதன் தொடர்ச்சியாக 'லியோ' படமும் LCUவில் இணைய, தற்போது அதன் வரிசையில் கைதி 2, ரோலக்ஸ் என பல படங்கள் காத்திருக்கின்றன.
இருப்பினும் இந்த யூனிவெர்ஸ் எத்தனை படங்களை வெளியிட போகிறது என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.
LCU
லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்
தென்னிந்திய சினிமாவில் ஹாலிவுட் பாணியில், தனக்கான சினிமாடிக் யுனிவர்ஸ் உருவாக்கிய முதல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான்.
LCUவில் இப்போது கைதி, விக்ரம் மற்றும் சமீபத்தில் இணைந்த லியோ உள்ள நிலையில், லியோவின் அடுத்த பகுதி எடுப்பதாக இருந்தது, தற்போது விஜயின் அரசியல் என்ட்ரி காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனை தவிர, 'கைதி'யில் கார்த்தியின் கதாபாத்திரமான டில்லி கதாபாத்திரத்தை ஆராயும் கதையாக கைதி 2 அடுத்ததாக வெளிவரும்.
இதற்கான ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.
அதன்பின்னர், விக்ரம் திரைப்படத்தில் சூர்யா நடித்திருந்த ரோலக்ஸை பற்றி விவரிக்கும் திரைப்படம்.
அதன் பின்னர், இறுதி படமாக, இந்த மூன்று கதாநாயகர்களையும் உள்ளடக்கிய எதிர்கால கிராஸ்ஓவர் திரைப்படமாக, விக்ரம் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.