
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' ஓடிடி வெளியீடு எப்போது? எங்கு பார்க்கலாம்?
செய்தி முன்னோட்டம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளிக்கு வெளியான 'அமரன்' திரைப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தின் ஓடிடி (OTT) வெளியீடு பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விவரங்களின்படி, இப்படத்தின் ஓடிடி உரிமை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ஒப்பந்தத்தின் படி, அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 28 நாட்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் என்று முன்பே திட்டமிடப்பட்டது.
ஆனால், அமரன் திரைப்படத்திற்கு திரையரங்குகளில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளதால், ஓடிடி வெளியீட்டை ஒரு வாரம் தாமதமாக வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இப்படம் வரும் டிசம்பர் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகக்கூடும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Exclusive- Huge! #Amaran #OTT streaming pushed by a week! The @Siva_Kartikeyan blockbuster was supposed to to be streaming 28 days after release. Now seeing its phenomenal run in theatres, #Netflix has pushed the OTT premiere by a week! First time happening for a Tamil film! 👍👌… pic.twitter.com/y0yM0hGFYN
— Sreedhar Pillai (@sri50) November 11, 2024
கதை
'அமரன்' பற்றிய கதை
அமரன் திரைப்படம், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சோனி நிறுவனம் மற்றும் கமல்ஹாசன், மகேந்திரன் ஆகியோர் தயாரித்துள்ள அமரன், உலகளவில் ₹250 கோடி வசூலிக்குள் கடந்து பாக்ஸ் ஆபீசில் ரெகார்ட் செய்துள்ளது.
இந்தப்படத்தின் ஓடிடி வெளியீட்டின் தாமதம், திரையரங்கின் வெற்றியின் காரணமாக, ரசிகர்களிடம் இன்னும் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் என சொல்லலாம்.