அல்லு அர்ஜுன் கைது: எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்?
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் இன்று கைது செய்யப்பட்டார். அவரது சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான 'புஷ்பா 2: தி ரைஸ்' இன் பிரீமியர் காட்சியில் கூட்ட நெரிசல் சிக்கி 39 வயது பெண் உயிரிழந்ததும் மற்றும் அவரது மைனர் மகன் படுகாயம் அடைந்ததும் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத் காவல்துறையினர் அல்லு அர்ஜுன் வீட்டிற்கு வந்து அவரையும், அவரது தனிப்பட்ட பாதுகாவலரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கைது செய்தனர். காவல்துறையால் எடுத்துச் செல்லப்பட்டது சமூக ஊடகங்களில் வைரலானது. கைதிற்கு பின்னர் அல்லு அர்ஜுன் சிக்கட்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
Twitter Post
காவல்துறையினர் படுக்கையறையில் அத்துமீறி நுழைந்தனர் என புகார்
அல்லு அர்ஜுன் கைது செய்யப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோவில் அவர் கேஷுவலாக காபி பருகிக்கொண்டே குடும்பத்தினரிடம் உரையாடுவதை காணமுடிந்தது. அதன் பின்னர் அவரிடம் பேசிய காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் அல்லு அர்ஜுன், அவர்கள் தன்னை கைது செயவந்திருப்பது குறித்தோ, அல்லது அவர்கள் கடமையாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தோ தான் கேள்வி எழுப்பவில்லை எனவும், தான் உடைமாற்றி கொண்டு வருகிறேன் என கூறிய பின்னரும் படுக்கையறைக்குள் அத்துமீறி நுழைந்தது குறித்து அல்லு அர்ஜுன் ஆட்சேபம் தெரிவித்ததை காண முடிந்தது. அல்லு அர்ஜுன் கைது செய்யப்படும் போது அவருடைய தந்தை, தம்பி மற்றும் மனைவி உடன் இருந்ததை காணமுடிந்தது.
எந்த பிரிவின் கீழ் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார்?
அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழுவினர் மற்றும் சந்தியா தியேட்டர் நிர்வாகம் ஆகியோர் மீது BNS பிரிவுகள் 105 மற்றும் 118(1) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிரிவு 105: இந்தப் பிரிவு, கொலைக்கு அடங்காத குற்றமிழைக்கக் கூடிய கொலையைப் பற்றியது. தண்டனை ஆயுள் தண்டனையாக இருக்கலாம் அல்லது ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் சேர்த்து அபராதமும் விதிக்கப்படலாம். மரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அல்லது மரணத்தை விளைவிக்கக்கூடிய கடுமையான உடல் காயம் அல்லது அந்தச் செயல் மரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை அறிந்து, ஆனால் அதை ஏற்படுத்தும் நோக்கம் இல்லாமல் செய்ய வேண்டும். பிரிவு 118(1): மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, இருபதாயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் அடங்கும்.