'புஷ்பா 2' திரையிடலின் போது ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக நடிகர் அல்லு அர்ஜுன் கைது
'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது உயிரிழப்பு ஏற்பட்ட வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூனை காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் மற்றும் பலர் நடிப்பில், 5ஆம் தேதி பிரமாண்டமாக வெளியான 'புஷ்பா 2' படத்தின் சிறப்புக் காட்சி கடந்த 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடைபெற்றது. அப்போது, அல்லு அர்ஜூன் தனது குடும்பத்தாருடன் அந்த சிறப்புக் காட்சியை பார்த்து வருகின்றபோது, திரையரங்கில் கூட்டம் அலைமோதியது.
Twitter Post
கூட்டநெரிசலில் சிக்கி பெண் மரணம்
கடந்த சில நாட்களுக்குப் பிறகு, ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா திரையரங்கின் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், அந்த வழக்கின் விசாரணைக்காக இன்று (டிச.13) நடிகர் அல்லு அர்ஜூன் காவல்துறையினரால் அழைக்கப்பட்டார். அவர் ஹைதராபாத்தில் உள்ள சிக்கட்பல்லி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், தெலுங்கு சினிமா மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.