நாக சைதன்யா- ஷோபிதா துலிபாலா திருமணம்: தேதி, இடம் உள்ளிட்ட தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை ஷோபிதா துலிபாலா இருவருக்கும் டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக, அவர்கள் ஜெய்ப்பூரில் டெஸ்டினேஷன் வெட்டிங் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், நாகார்ஜுனாவின் குடும்பத்திற்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரம்மாண்ட திருமணத்திற்காக ஸ்டுடியோவுக்குள் சிறப்பு மணிமண்டபம் கட்டப்படும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், இது குறித்து நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா இருவரிடம் இருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Wedding bells are ringing, and it’s not long before actor couple #NagaChaitanya and #SobhitaDhulipala will exchange garlands for becoming Mr and Mrs. If sources are to be believed, the much-awaited #Tollywood wedding will occur on December 4. #NagaChaitanya #SobhitaDhulipala pic.twitter.com/O28QjLwbRz
— HT City (@htcity) November 4, 2024
விவரங்கள்
கடந்த மாதம் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்வு
ஆகஸ்ட் 8ஆம் தேதி, நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா ஹைதராபாத்தில் ஒரு நெருக்கமான விழாவில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
அதன் பின்னர், கடந்த சில தினங்களுக்கு முன்னர், திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் துவங்கியதாக ஷோபிதா தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.
இந்த வருட தீபாவளியை இந்த ஜோடி நாகார்ஜூனா குடும்பத்தாருடன் கொண்டாடிய புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகின.
நாக சைதன்யாவும், ஷோபிதா துலிபாலாவும் 2022இல் ஒரு பார்ட்டியில் சந்தித்து கொண்டனர் என்றும், அதன் பின்னர் இருவருக்கும் காதல் மலர்ந்தது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.