'பெருமாச்சி மண்ணே...': ஆக்ரோஷமாக வெளியான சூர்யாவின் கங்குவா ட்ரைலர்
செய்தி முன்னோட்டம்
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'கங்குவா'.
இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.
சுமார் 350 கோடி பொருட்செலவில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 10 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
ட்ரைலர் வெளியான சில மணிநேரத்திலேயே கிட்டத்தட்ட 100k லைக்குகளை பெற்றது. இப்படத்தில் ஹீரோவாக சூர்யாவும், வில்லனாக பாபி தியோலும் நடித்துள்ளனர்.
நாயகியாக திஷா பதானி நடித்துள்ளார்.
இசையமைத்திருப்பது தேவி ஸ்ரீ பிரசாத் ஆவர். படத்தை தயாரித்திருப்பது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா.
ட்விட்டர் அஞ்சல்
கங்குவா ட்ரைலர்
The Rise of the King 👑🗡️
— Studio Green (@StudioGreen2) August 12, 2024
Witness the #KanguvaTrailer - Tamil❤️🔥
▶️ https://t.co/YqMcW6Nmua#Kanguva #KanguvaFromOct10 🦅@Suriya_offl @thedeol @directorsiva @DishPatani @ThisIsDSP #StudioGreen @GnanavelrajaKe @vetrivisuals @supremesundar @UV_Creations @KvnProductions… pic.twitter.com/jQ0DlPPopP