
FIR 2 படத்தை பற்றி ட்வீட் செய்த விஷ்ணு விஷால்; 'ஸ்பை' தொடராக எடுக்கவும் திட்டம்
செய்தி முன்னோட்டம்
விஷ்ணு விஷால், தனது அடுத்த படமான FIR 2 பற்றிய அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார்.
சென்ற ஆண்டு வெளிவந்த, FIR படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிடப்போவதாக, தற்போது அறிவித்து இருக்கிறார்.
ஊடக செய்திகளின் படி, FIR முதல் பாகத்தை அடுத்து, அதை 'ஸ்பை' தொடராக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இப்படத்தை, விஷ்ணு விஷாலின் விவி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்றும், புது இயக்குனர் இயக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடித்து வரும், லால் சலாம், ஆர்யன் படங்களை முடித்த பிறகு, இந்த பாகத்தை விஷ்ணு விஷால் தயாரிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷாலின் சமீபத்திய வெளியீடான கட்டா குஸ்தி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
ட்விட்டர் அஞ்சல்
FIR 2 படத்தின் அப்டேட்
Details on #FIR2 :) https://t.co/3iUa8Dd5eY
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) January 16, 2023