Page Loader
13 ஆண்டுகளுக்கு பின்னர் விஷால்-சுந்தர்.சியின் மதகஜராஜா ரிலீஸ் தேதி முடிவு
மதகஜராஜா ரிலீஸ் தேதி முடிவு

13 ஆண்டுகளுக்கு பின்னர் விஷால்-சுந்தர்.சியின் மதகஜராஜா ரிலீஸ் தேதி முடிவு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 03, 2025
11:23 am

செய்தி முன்னோட்டம்

ஒரு வழியாக 13 ஆண்டுகள் கழித்து மதகஜராஜாவின் ரிலீஸ் தேதி உறுதியாகிவிட்டது. சுந்தர் சி இயக்கத்தில்,விஷால் நடிக்க, நிதி சிக்கல்களால் 2013 முதல் கிடப்பில் கிடந்த இந்த படத்தில், சந்தானம், வரலட்சுமி சரத்குமார் மற்றும் அஞ்சலி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படம் பொங்கல் ரேஸில் கலந்து கொண்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சமூக வலைதளங்களில் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியானது. மதகஜ ராஜாவின் படப்பிடிப்பு 2012 இல் துவங்கியது. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நிறைவடைந்தாலும், படம் 2013 இல் நிதி சிக்கல்களால் நீண்ட காலமாக வெளியிடப்படாமல் இருந்தது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள் 

மதகஜராஜா படத்தின் மற்ற விவரங்கள்

மதகஜராஜா படத்தின் முதல் அதிகாரப்பூர்வ டிரெய்லர் சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப்பில் வெளியிடப்பட்டது. பல தாமதங்கள் மற்றும் ஒத்திவைப்புகளுக்குப் பிறகு, ஜனவரி 12 ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் வெள்ளிக்கிழமை அறிவித்தனர். திரைப்படத் தயாரிப்பாளர் சுந்தர் சி இயக்கத்தில், மதகஜராஜா, சுந்தர்.சி படத்தை போலவே காமெடி- குடும்ப பாடமாக உருவாகியுள்ளது. படத்திற்கு இசையமைத்திருப்பது விஜய் ஆண்டனி. இதை ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ளது. ஆம்பள, ஆக்‌ஷன் படங்களைத் தொடர்ந்து விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் மதகஜராஜா.