NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஹாரிஸ் ஜெயராஜின் இசை கச்சேரியில் வெளியாகவுள்ளது விக்ரமின் துருவ நட்சத்திரம் டிரைலர்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹாரிஸ் ஜெயராஜின் இசை கச்சேரியில் வெளியாகவுள்ளது விக்ரமின் துருவ நட்சத்திரம் டிரைலர்! 
    விக்ரமின் துருவ நட்சத்திரம் டிரைலர்

    ஹாரிஸ் ஜெயராஜின் இசை கச்சேரியில் வெளியாகவுள்ளது விக்ரமின் துருவ நட்சத்திரம் டிரைலர்! 

    எழுதியவர் Arul Jothe
    Jun 08, 2023
    11:46 am

    செய்தி முன்னோட்டம்

    சியான் விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக தள்ளிப்போன படம் 'துருவ நட்சத்திரம்'.

    இது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்பை த்ரில்லர் பபடம் என அறிவித்துள்ளனர். அதை இரண்டு பாகமாக வெளியிடுவது என முன்னர் இயக்குனர் அறிவித்திருந்தார்.

    ஆனால், 2017 ஆண்டில் துவங்கப்பட்ட திரைப்படம், நிதி நெருக்கடி காரணமாக தாமதமானதாக கூறப்பட்டது.

    பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்பட்டு, படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து இப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி வெளியாகும் என செய்திகள் வெளியாகி உள்ளது.

    இந்த திரைப்படத்தில், ரிது வர்மா, பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், ராதிகா, அர்ஜுன் தாஸ், திவ்யதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    படத்திற்கு இசை, கெளதம் மேனனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

    Dhuruva Natchathiram Movie டிரெய்லர் 

    மலேசியாவில் வெளியாகவுள்ளது விக்ரமின் துருவ நட்சத்திரம் டிரைலர்! 

    ஒன்ட்ராகா என்டர்டெயின்மென்ட், கொண்டாடுவோம் என்டர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா எப்போது என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

    இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், வரும் ஜூன் 17-ஆம் தேதி மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார். அப்போதே 'துருவ நட்சத்திரம்' படத்தின் இசைவெளியீட்டு விழாவும், அதனுடன் படத்தின் ட்ரைலரையும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    இதனை அறிந்த விக்ரம் ரசிகர்கள், பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    நடிகர் விக்ரம் கடைசியாக 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில், சோழ இளவரசர் 'ஆதித்த கரிகாலன்' வேடத்தில் நடித்திருந்தார். அவரின் அசத்திய நடிப்பு, அனைவரின் பாராட்டை பெற்றது. தற்போது விக்ரம், பா.ரஞ்சித் இயக்கும் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விக்ரம்
    நடிகர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விக்ரம்

    2022-ல் தோல்வியை சந்தித்த டாப் ஹீரோக்களின் தமிழ்ப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்படம்
    சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர் தமிழ் திரைப்படம்
    ப. ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம் பா ரஞ்சித்

    நடிகர்

    லியோ படத்தில், நாசரின் சகோதரர் நடிக்கிறார்; இணையத்தில் கசிந்த புதுத்தகவல்  நடிகர் விஜய்
    பாராட்டுகளை அள்ளும் விஜய் ஆண்டனியின் உன்னத செயல்! இசையமைப்பாளர்
    ரசிகர்களின் சாக்லேட் பாய் என்றழைக்கப்படும் நடிகர் மாதவனின் பிறந்தநாள்!  பிறந்தநாள்
    கார்த்தியின் அடுத்த படத்தில் இணைகிறாரா அரவிந்த் சுவாமி? இணையத்தில் வைரலாகும் புதுத்தகவல் கார்த்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025