Page Loader
மீண்டும் மணிரத்னம் படத்தில் இணைய போகிறார்களா விக்ரமும், ஐஸ்வர்யா ராயும்?
மீண்டும் மணிரத்னம் படத்தில் இணையும் விக்ரம்-ஐஸ்வர்யா ராய் ஜோடி?

மீண்டும் மணிரத்னம் படத்தில் இணைய போகிறார்களா விக்ரமும், ஐஸ்வர்யா ராயும்?

எழுதியவர் Venkatalakshmi V
May 15, 2023
03:51 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், அறிமுகம் ஆனது இயக்குனர் மணிரத்தினதுடைய 'இருவர்' திரைப்படத்தில் தான். அதன் பின்னர், மணிரத்னம் இயக்கும் பல படங்களில் அவர் நடித்தார். குறிப்பாக ஹிந்தியிலும், தமிழிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட 'இராவணன்' திரைப்படத்தில், முதல் முறையாக நடிகர் விக்ரமுடன் நடித்தார். தற்போது வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். சுவாரசியமாக, அவர் விக்ரமுடன் ஜோடியாக நடித்த எந்த திரைப்படத்திலும், அவர்கள் காதல் கை கூடவில்லை என்பதை சமீபத்தில் ஊடகத்தினர் ஒரு பேட்டியின் போது அவர்களிடம் குறிப்பிடவே, "அதை நீங்கள் மணியிடம் தான் கேட்க வேண்டும்" என விக்ரம் கூறினார். தற்போது அதன் தொடர்ச்சியாக, மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில், இவர்கள் இருவரும் நடிக்க போவதாக பேச்சு எழுந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

"மணியிடம் கேளுங்கள்"

ட்விட்டர் அஞ்சல்

மீண்டும் இணையும் ஜோடி?