Page Loader
GOAT திரைப்படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து வெளியான சர்ப்ரைஸ் தகவல்
GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது

GOAT திரைப்படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து வெளியான சர்ப்ரைஸ் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
May 27, 2024
06:44 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் முதல்முறையாக வெங்கட் பிரபுவுடன் இணைந்திருக்கும் திரைப்படம் தான் GOAT. இப்படத்தில் பல ஆச்சரியங்கள் இருந்தது படத்தின் பூஜை வீடியோவில் தெரியவந்தது. அதன்படி, முதல்முறையாக விஜய் மற்றும் பிரஷாந்த் இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர். பிரபுதேவாவுடன் விஜய் முதல்முறையாக நடிக்கிறார். அதோடு இதுநாள் வரை கதாநாயகனாக தான் நடிப்பேன் என கங்கணம் கட்டிக்கொண்டிருந்த மைக் மோகனும் இப்படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் விஜய் முதன்முறையாக மூன்று வேடத்தில் நடிக்கிறாராம். போஸ்டரில் இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே வெளியான நிலையில், மூன்றாவது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக வைத்திருக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

embed

GOAT சர்ப்ரைஸ்!

#TheGreatestOfAllTime - ThalapathyVijay is having 3 characters in the movie👀 Another 1 character hasn't been revealed so far !! ©️VP pic.twitter.com/7OynwWkK4g— AmuthaBharathi (@CinemaWithAB) May 27, 2024