#தளபதி69: 12 வருடங்கள் கழித்து இயக்குனர் ஷங்கர் உடன் இணையும் விஜய்?
நடிகர் விஜய், 'லியோ' படத்தை தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான முதல் ஷூட்டிங் ஷெட்யூலும் முடிவடைந்ததாக வெங்கட் பிரபு சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், விஜயின் அடுத்த படமான 'தளபதி 69' குறித்த சுவாரசிய தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது. விஜய், 12 வருடங்கள் கழித்து, மீண்டும் ஷங்கர் உடன் இணையவுள்ளார் என்பது தான் அது. 'நண்பன்' திரைப்படத்தில் இணைந்த இந்த ஜோடி, மீண்டும் இணையவுள்ளதாக கசிந்த இந்த தகவல், விஜயின் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது ஷங்கர், 'இந்தியன் 2' படவேலைகளில் பிஸியாக உள்ளார். அதை முடித்ததும், இப்படத்திற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்சன் உடன் இணையும் விஜய்
இந்த நிலையில், பீஸ்ட், லியோ படத்தின் ஒளிப்பதிவாளர், மனோஜ் பரமஹம்சா சமீபத்திய பேட்டி ஒன்றில், "பீஸ்ட் படம் நிறைவடைந்ததும், படக்குழுவினருக்கு, விஜய் ஒரு விருந்து அளித்தார். அப்போது அவர் மீண்டும் நெல்சன் உடன் இணைவேன் என உறுதியளித்ததாக தெரிவித்தார்," எனக்கூறியுள்ளார். அவர் கூறுவது படி, அடுத்ததாக விஜய், நெல்சன் இயக்கத்தில் நடிக்கவும் வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்- உம், விரைவில் விஜயுடன் இணையஉள்ளதாக தெரிவித்தார். தற்போது, விஜய் தன்னுடைய #தளபதி 69-இற்கு யாரை தேர்வு செய்வார் என்பதை அறிய அவரின் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.