Page Loader
சமூகவலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்ட நபர்கள் பட்டியலில், நடிகர் விஜய் மூன்றாம் இடம்! 
ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட நபர்கள் பட்டியலில், நடிகர் விஜய்க்கு 3-ம் இடம்!

சமூகவலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்ட நபர்கள் பட்டியலில், நடிகர் விஜய் மூன்றாம் இடம்! 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 19, 2023
10:46 am

செய்தி முன்னோட்டம்

ஒவ்வொரு மாதமும், ட்விட்டரில் தேடப்படும் பிரபலங்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிடும். அதன்படி, கடந்த ஜூன் மாதம், ட்விட்டரில் அதிகமாக பேசப்பட்ட நபர்கள் பட்டியலில், பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அடுத்தபடியாக மூன்றாமிடத்தில் இருப்பது, தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருக்கும் தளபதி விஜய். முதல் 5 இடத்தில் இடம்பிடித்து இருக்கும் ஒரே நடிகர், அதிலும் குறிப்பாக தென்னிந்திய நடிகர் விஜய் மட்டுமே. சென்ற மாதம், நடிகர் விஜய், அரசு பொதுத்தேர்வில், முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி மாணவ-மாணவியருக்கு பாராட்டும், பரிசு தொகையும் வழங்கினார். அதை தொடர்ந்து அவர் அரசியலில் இறங்கபோகிறார் என பேச்சு எழுந்தது. இந்த காரணங்களினால்தான், சமூக வலைத்தளத்தில் அவரை பற்றி அதிகம் பேர் பேசியுள்ளதாக தெரிகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ட்விட்டரில் ட்ரெண்டான விஜய்