
"சுவையான உணவை சாப்பிடாவிட்டால், என் வாழ்க்கை சுவையாக இருக்காது": விஜய் சேதுபதி கருத்து
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள 'பார்சி' வெப் சீரீஸிற்கு, பல ஊடங்களில் ப்ரோமோஷன் செய்து வந்தனர்.
அதில் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நடிகர் விஜய் சேதுபதியின் உடல் எடை குறைத்ததை பற்றி கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஜய் சேதுபதி, "எனக்கு டயட் கான்செப்ட் மீது நம்பிக்கை இல்லை, அதனால் நான் சுவையான உணவை சாப்பிட வேண்டும். எனக்கு பிடிக்கும். சுவையான உணவுகளை சாப்பிடாவிட்டால் என் வாழ்க்கை சுவையாக இருக்காது என்று நம்புகிறேன். அதனால் நான் சுவையான உணவுகளை சாப்பிட விரும்புகிறேன்." எனக்கூறியுள்ளார்.
இவரின் இந்த குறிப்பிட்ட வீடியோ வெளியானதை அடுத்து, அவரின் பேச்சிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
டயட் குறித்து பேசிய விஜய் சேதுபதி
You are my kinda guy @VijaySethuOffl ❤️ bro pic.twitter.com/CYW4OIi75S
— Puneet Sharma (@PuneetVuneet) February 20, 2023