Page Loader
ட்ரிம்மாக மாறியதன் ரகசியம் குறித்து பேசியுள்ள விஜய் சேதுபதி
ட்ரிம்மாக மாறியதன் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி

ட்ரிம்மாக மாறியதன் ரகசியம் குறித்து பேசியுள்ள விஜய் சேதுபதி

எழுதியவர் Venkatalakshmi V
Jan 21, 2023
03:14 pm

செய்தி முன்னோட்டம்

சில வாரங்களுக்கு முன்னர், விஜய் சேதுபதி தனது சமூக வலைதள பக்கத்தில், தனது புதிய புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார். அதில், எடை மெலிந்த உருவத்துடன், ஃபிட்டாக இருந்த விஜய் சேதுபதியை கண்டு ஆச்சரியப்பட்ட அவர் ரசிகர்கள், அவரை பாராட்டினர். ஆனால், அது குறித்து எந்த கருத்தையும் இது வரை தெரிவிக்காமல் இருந்த நடிகர் விஜய் சேதுபதி, சமீபத்திய பேட்டி ஒன்றில் இது பற்றி மனம் திறந்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, "எனது நண்பர், என்னை வற்புறுத்தி, அந்த புகைப்படத்தை பதிவேற்ற சொன்னார். ஆனால், ரசிகர்களிடம் இருந்து, இப்படி ஒரு வரவேற்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எடை குறைந்ததை காட்டுவதற்காக, நான் அந்த பதிவை இடவில்லை", என்று குறிப்பிட்டு இருந்தார்.

உடல் எடை

உடல் எடை குறைந்த விஜய் சேதுபதி

உடல் எடை காரணமாக வந்த எதிர்மறை விமர்சனங்களுக்கு, உடல் எடை பற்றி, தான் என்றும் கவலை பட்டது இல்லை என்றும், தன்னுடைய நடிப்புக்காக மட்டுமே, தான் அறியப்படவேண்டும் என்றும், முன்னதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார் சேதுபதி. DSP படம் முடிந்ததும், கிடைத்த ஒய்வு நேரங்களில், உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்ததாகவும், அதன் பலன் தான், இந்த 'ட்ரிம் லுக்' என்றும் அவர் கூறியிருந்தார். "சில சமயங்களில் வேலை அழுத்தம் காரணமாக, படப்பிடிப்புகளின் போது, இரவு உடற்பயிற்சிகளை தவறவிடுவேன். அதுமட்டுமில்லாமல், நான் மிகவும் உணர்திறன் கொண்ட நபர். அதனால் சிறு காயம் அடைந்தாலும், பின்னர் அதை தொடமாட்டேன். ஆனால் ரசிகர்களின் பாராட்டை பார்த்த பிறகு, இனி ஜிம்மைத் தவிர்க்க முடியாது", என்று தொடர்ந்து கூறியுள்ளார்.

முகநூல் அஞ்சல்

விஜய் சேதுபதி