திரையரங்குகளில் மட்டுமல்ல, OTTயிலும் சாதித்து காட்டிய விஜய் சேதுபதியின் மகாராஜா
விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா அவரது கேரியரில் ஒரு மைல் கல்லாக அமைந்தது மற்றும் அது மாபெரும் வெற்றியைப் பெற்றது. விஜய் சேதுபதியின் நடிப்பை பற்றி சொல்லவே தேவை இல்லை. மற்ற படங்களை போல, இப்படத்திலும் அபாரமாக இருந்தது. அனைவராலும் பரவலாகப் பாராட்டப்பட்டது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் முடித்தபின்னர், மகாராஜா நெட்ஃபிலிக்ஸ்-இல் ஸ்ட்ரீமிங்கிற்கு வெளியானது. திரையரங்கில் சாதித்து காட்டிய மகாராஜா தற்போது ஓடிடியிலும் சாதனை புரிந்துள்ளது. 2024ஆம் ஆண்டில் பல பிரபல பாலிவுட் படங்களை தாண்டி, உலகளவில் நெட்ஃபிலிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட இந்தியத் திரைப்படமாக மகாராஜா உருவெடுத்ததுள்ளது. 18.6 மில்லியன் ஸ்ட்ரீமிங்களுடன், 2024 ஆம் ஆண்டுக்கான நெட்ஃபிக்ஸ் தரவரிசையில் மகாராஜா முதலிடத்தில் உள்ளது.
Twitter Post
நெட்ஃபிலிக்சில் அதிகம் பார்க்கப்பட்ட மற்ற படங்கள்
அடுத்த இடத்தில் க்ரூ (17.9 மில்லியன் ஸ்ட்ரீமிங்ஸ்) மற்றும் லாபட்டா லேடீஸ் (17.1 மில்லியன் ஸ்ட்ரீமிங்ஸ்) உள்ளது. ஷைத்தான், ஃபைட்டர், அனிமல் மற்றும் டன்கி ஆகியவை இந்த பட்டியலில் உள்ள மற்ற படங்கள் ஆகும். மகாராஜா படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்னர் குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கியுள்ளார். அப்படமும் மகாராஜாவை போலவே க்ரைம் த்ரில்லர் பாணியிலான படம் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், 'நட்டி' நடராஜ், சிங்கம்புலி மற்றும் அபிராமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தி ரூட், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.