
விஜய்யின் GOAT திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் வெங்கட் பிரபு முதன்முறையாக நடிகர் விஜயுடன் இணைந்துள்ள GOAT-"The Greatest of All Time" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
முன்னதாக இந்த படத்தின் அப்டேட் ஒன்றை இன்று மதியம் 1:05 மணிக்கு வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும், இயக்குனர் வெங்கட் பிரபுவும் இன்று காலை அறிவித்திருந்தனர்.
குறிப்பிட்ட நேரத்தில் வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டத்தை தந்துள்ளது.
ரம்ஜான் திருநாளுக்காக இருவரும் தங்கள் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தபோது இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
தற்போது GOAT படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. தற்போது வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டதால், படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
embed
GOAT திரைப்படத்தின் வெளியீட்டு தேதி
pic.twitter.com/E02vTVUZ15— Vijay (@actorvijay) April 11, 2024