Page Loader
'பல நேரமாக அன்னஆகாரமின்றி..'; மகளின் பிரிவு துயரில் வாடும் விஜய் ஆண்டனி
மகளின் பிரிவு துயரில் வாடும் விஜய் ஆண்டனி

'பல நேரமாக அன்னஆகாரமின்றி..'; மகளின் பிரிவு துயரில் வாடும் விஜய் ஆண்டனி

எழுதியவர் Venkatalakshmi V
Sep 20, 2023
04:10 pm

செய்தி முன்னோட்டம்

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் நேற்று அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பள்ளி மாணவியான அவரது மகள், ஒரு வருடமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார் எனவும், அதற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று முழுவதும் அவரது உடல், விஜய் ஆண்டனியின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இன்று மதியம் 12 மணியளவில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இது பற்றி, தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் தனஞ்செயன் தனது எக்ஸ் தளத்தில், விஜய் ஆண்டனியால் மகளின் இழப்பை தாங்க முடியவில்லை. பல மணிநேரம் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்தார் என பதிவிட்டிருந்தார்.

embed

மகளின் பிரிவு துயரில் வாடும் விஜய் ஆண்டனி

He didn't even take water for many many hours, not a drop. Unable to see him suffering like this.— G Dhananjeyan (@Dhananjayang) September 19, 2023