Page Loader
மகளை இழந்த 9 நாட்களில், பட ப்ரோமோஷன் வேலைகளில் பங்கேற்றார் விஜய் ஆண்டனி
ரத்தம் திரைப்படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள விஜய் ஆண்டனி

மகளை இழந்த 9 நாட்களில், பட ப்ரோமோஷன் வேலைகளில் பங்கேற்றார் விஜய் ஆண்டனி

எழுதியவர் Srinath r
Sep 29, 2023
10:05 am

செய்தி முன்னோட்டம்

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது மகள் இறந்த ஒன்பது நாட்களில், தனது அடுத்த திரைப்படத்தின் ப்ரோமோஷனில் பங்கேற்றுள்ளார். விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா கடந்த 9 நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு மன அழுத்தம் காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில் ரத்தம் படத்தின் தயாரிப்பாளரான தனஞ்செயன், விஜய் ஆண்டனி ப்ரோமோஷன் வேலைகளில் பங்கெடுத்த படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "விஜய் ஆண்டனி தொழில் மாண்புக்கு எடுத்துக்காட்டு ஆனவர். தனிப்பட்ட துயரத்தை தாண்டி எங்களின் ரத்தம் படத்தின் ப்ரோமோஷனில் அவர் கலந்து கொண்டது அவருக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மீதுள்ள அக்கரையை காட்டுகிறது" என பதிவிட்டு இருந்தார். ரத்தம் திரைப்படம் அக்டோபர் 6 இல் திரையரங்குகளில் வெளியாகிறது.

ட்விட்டர் அஞ்சல்

தயாரிப்பாளர் தனஜெயன் பதிவிட்டுள்ள ட்விட்