
தமிழ் சினிமாவில் மற்றுமொரு டைம் ட்ராவல் படம்: LIK ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
செய்தி முன்னோட்டம்
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தின் பெயர் LIK - லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என நேற்று இரவு அறிவிப்பு வெளியானது.
பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்த பெயர் அறிவிப்பை தொடர்ந்து இன்று காலை படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
அதன்படி, இப்படமும் தமிழ் சினிமாவில் வெளியான மற்றுமோர் டைம் ட்ராவல் திரைப்படம் எனத்தெரியவருகிறது.
மொபைல் கேட்ஜெட் துணைக்கொண்டு, தனது காதலை தேடி 2035 -இற்கு பயணப்படும் ஒரு இளைஞனின் கதை இது என செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்ததாகவும், பின்னர் அவர் விலகியதால், பிரதீப் ரங்கநாதனை ஹீரோ ஆகிவிட்டாராம் விக்கி.
இப்படத்திற்கு இசையமைத்திருப்பது அனிருத்.
ட்விட்டர் அஞ்சல்
LIK ஃபர்ஸ்ட் லுக்
Plot of #LIK #LoveInsuranceKompany !!
— AmuthaBharathi (@CinemaWithAB) July 25, 2024
A Boy who time travels to 2035 via the Mobile gadgets for his Love 📲💞
The project was previously supposed to be done by #Sivakarthikeyan 🤝 pic.twitter.com/tZuC2P6rYo