
பிரதீப் ரங்கநாதன்- விக்னேஷ் சிவன் படத்தின் பெயர் மாற்றம்; புது டைட்டில் வெளியானது
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு அஜித்-ஐ வைத்து ஒரு படம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், வெளிவராத பல காரணங்களினால் அந்த படம் கைவிடப்படவே, கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பின்னர், அவர் 'லவ் டுடே' புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்.ஐ.சி என்ற படத்தை இயக்கபோவதாக அறிவித்தார்.
ஆனால், படத்தின் டைட்டில் குறித்து சர்ச்சைகள் கிளம்பவே, படத்தின் பெயரை மாற்றுவதாக அறிவித்தனர் விக்னேஷ் சிவனும், தயாரிப்பாளர் தரப்பும்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும், ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் புதிய டைட்டில் நேற்று நள்ளிரவு வெளியானது.
ஹீரோ பிரதீப்பின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் பெயர் LIK (Love Insurance Kompany) என அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
LIK- புது டைட்டில்
Here's the most awaited Title for you all. 🫶🏻 #LoveInsuranceKompany #LIK
— Rowdy Pictures (@Rowdy_Pictures) July 24, 2024
Birthday tribute to our own @pradeeponelife ' 😁🥳@VigneshShivN @7screenstudio @iam_SJSuryah @anirudhofficial #rowdypictures pic.twitter.com/ODeb2wwKXb