Page Loader
AK 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற இதுதான் காரணமா?!
AK 62வில் நீடித்து வந்த மர்மத்தை உடைத்த விக்னேஷ் சிவன்

AK 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற இதுதான் காரணமா?!

எழுதியவர் Venkatalakshmi V
Apr 07, 2023
04:11 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித்குமாரின் கடைசி ரிலீஸ் 'துணிவு'. அந்த படத்திற்கு பிறகு, விக்னேஷ் சிவனுடன் அவர் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க போவதாகவும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, விக்னேஷ் சிவன், படத்திலிருந்து நீக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. அதற்கு காரணமாக, விக்னேஷ் சிவன் கூறிய கதை, அஜித்துக்கும், தயாரிப்பாளர் தரப்பிற்கும் பிடிக்காமல் போனதுதான் எனவும் கூறப்பட்டது. அதன் பிறகு, விக்னேஷ் சிவனும் அதை உறுதிபடுத்தும் விதமாக, தனது சமூகவலைதள பக்கங்களிலிருந்து, AK 62 சம்மந்தமான அறிவிப்புகளை அகற்றிவிட்டார். எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவுமே வெளியாகவில்லை.

ட்விட்டர் அஞ்சல்

AK 62வில் இருந்து விலகியதை உறுதிப்படுத்தினார் விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

"மகிழ் திருமேனி இயக்குவதில் எனக்கு மகிழ்ச்சி"

இதனிடையே AK 62 -வை இயக்கப்போவது இயக்குனர் மகிழ் திருமேனி என கூறப்பட்டது. இதை சார்ந்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஜித்குமாரின் தந்தை காலமானார். அதனால், அவர் படம் சார்ந்த அறிவிப்புகள் ஒத்திவைக்கப்படும் எனக்கூறப்பட்டது. மறுபுறம் விக்னேஷ் சிவன், வேறு கதாநாயகனை வைத்து, ஒரு படத்தை விரைந்து எடுக்க திட்டமிட்டுள்ளார் என செய்திகள் வெளியாயின. இதற்கிடையே, தனியார் சேனலின் நிகழ்ச்சியொன்றில் பங்கு பெற்ற விக்னேஷ் சிவன், தான் கூறிய கதையின், இரண்டாம் பகுதி, தயாரிப்பாளர் தரப்பிற்கு திருப்தியாக இல்லாத காரணத்தினால் தான், தான் AK 62 படத்தை விட்டு வெளியேறியதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருப்பது, ஒரு 'தல' ரசிகனாக தனக்கு மகிழ்ச்சியே எனக்கூறினார்.