Page Loader
விக்னேஷ் சிவனுக்கு தொடரும் சோதனைகள்; அடுத்தடுத்து கைநழுவும் படங்கள்
விக்னேஷ் சிவனுக்கு தொடரும் சறுக்கல்கள்

விக்னேஷ் சிவனுக்கு தொடரும் சோதனைகள்; அடுத்தடுத்து கைநழுவும் படங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 28, 2023
05:05 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இது சோதனை காலம் போலும். அஜித் குமாரின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போவதாக அறிவிக்கபட்டிருந்தது. ஆனால், படம் அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் தீயாய் பரவ ஆரம்பித்தது. அதற்கு காரணமாக, விக்னேஷ் சிவனும், அவரின் கதையையும் கூறினார்கள். விக்கி கூறிய கதை, அஜித்துக்கும், தயாரிப்பாளர்களும் திருப்திப்படுத்தவில்லை என்று கூறப்பட்டது. அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி, இயக்க போவதாகவும் கூறப்பட்டது. விக்னேஷ் சிவனும் அதை உறுதி செய்யும் விதமாக, தன்னுடைய இன்ஸ்டா பயோவிலிருந்து AK62 படத்தை நீக்கி விட்டு, விக்கி 6 என பதிவை மாற்றி இருந்தார்.

விக்னேஷ் சிவன்

தயாரிப்பிலும் சரிவை சந்தித்த விக்னேஷ் சிவன்

இந்நிலையில், அவரின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், 'ஊர் குருவி' என்ற படத்தை இயக்க போவதாக பல மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்க போவதாகவும், அருண் என்பவர் இயக்க போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அறிவிப்பு வெளியான நிலையிலேயே இருந்த அந்த திரைப்படத்தை தற்போது ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது மட்டுமின்றி, இந்த படத்தில் இருந்து கவினும் விலகி விட்டதாகவும், அவருக்கு பதிலாக அஸ்வின் நடிக்க போவதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படி தொடர் சோதனையில் சிக்கி இருக்கும் விக்கிக்கு தற்போதைய ஆறுதலான விஷயம், விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாராக்கிறது எனக்கூறப்படுகிறது.