Page Loader
மீண்டும் மீண்டும் சீண்டும் விக்கி; நானும் ரவுடி தான் படத்திலிருந்து BTS கட்சியை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் 
NDK படத்திலிருந்து BTS கட்சியை இன்ஸ்டாவில் வெளியிட்ட விக்னேஷ்

மீண்டும் மீண்டும் சீண்டும் விக்கி; நானும் ரவுடி தான் படத்திலிருந்து BTS கட்சியை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் 

எழுதியவர் Venkatalakshmi V
Nov 18, 2024
08:53 pm

செய்தி முன்னோட்டம்

நயன்தாராவின்நயன்தாராவின் பிறந்தநாளில், விக்னேஷ் அந்த ஆவணப்படத்தில் இடம்பெறாத ஒரு கிளிப்பை வெளியிட்டார். இந்த குறிப்பிட்ட கிளிப் பதிப்புரிமைச் சிக்கல்களால் நெட்ஃபிலிக்ஸ்-இல் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நானும் ரவுடி தான் படத்தின் திரைக்குப் பின்னால் உள்ள காட்சிகளை தனது இன்ஸ்டாகிராம் கதைகளில் வெளியிட்டதுடன் ஒரு நீண்ட குறிப்பை எழுதினார். அந்த வீடியோவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் அவர்களின் இரட்டை மகன்களான உயிர் மற்றும் உலகுடன் நேரத்தை செலவிடுவதும் இடம்பெற்றுள்ளது. அந்த காட்சியில் இடம்பெற்றுள்ள பாடல், விக்கி-நயன் இணைந்து பணியாற்றிய நானும் ரவுடி தான் படத்தின் கண்ணான கண்ணே பாடலின் வரிகள் வாய்ஸ் ஓவரில் இடம் பெற்றிருந்தது. விக்னேஷ் சிவனின் பதிவு, தான் நயன்தாரா மீது கொண்டுள்ள காதலை பற்றியும், சமீபத்திய சர்ச்சை பற்றியும் பேசியது.

குறிப்பு

நயன்தாராவுக்காக ஒரு நீண்ட குறிப்பும் எழுதினார் விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் எழுதிய குறிப்பில்,"காதல் இருக்கும் போது.... எங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. காதல் என்றால் என்ன என்பதை வரையறுத்ததற்கு நன்றி! உங்கள் முகம், உங்கள் இதயம், உங்கள் நடத்தை ... நாங்கள் சந்தித்த பிறகு உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் எனக்காக அர்ப்பணிக்கப்பட்டது என் உயிர்! உன்னை போல் யாரும் இருக்க முடியாது! நயன்தாரா, என் தங்கமே, யாரால் முழுமையாகவும் ஆழமாகவும் நேசிக்க முடியும்! நீங்கள் நேர்மையானவர் என்பது உண்மை ... நீங்கள் வலிமையானவர்!" என்று எழுதினார். "10 வருடங்களுக்கு முன்பு நாங்கள் காதலிக்கிறோம் என்று தெரிந்தபோது .. நான் விரும்பியதெல்லாம் உன்னுடன் வாழ்நாள் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சியுடன், நிறைய குழந்தைகளுடன்!" என்றும் எழுதி இருந்தார்.