AK63 : அஜித்குமாரை சந்தித்த இயக்குனர் விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித் குமாரை வைத்து AK62 திரைப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஜனவரி மாதத்தில், இதற்காக லண்டனில் உள்ள லைகா தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை அலுவலகத்திற்கு நேராக செல்வதாகவும் உற்சாகத்துடன் ட்வீட் செய்திருந்தார் விக்னேஷ் சிவன். ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை, AK 62 படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவன் கையை நழுவி போனது. மாறாக, அந்த வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்தது. படத்திற்கு, 'விடாமுயற்சி' என பெயர் சூட்டி அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது. இதெல்லாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அதன்பின்னர் படத்தை குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அஜித்குமாரும் வெளிநாடுகளில் பைக் பயணம் மேற்கொள்ள துவங்கி விட்டார்.
அஜித்தை நேரில் சந்தித்தாரா விக்னேஷ் சிவன்?
இதற்கிடையே, பைக் டூரை முடித்து கொண்டு இரு தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார் அஜித். தொடர்ந்து,'விடா முயற்சி' படத்தின் ஷூட்டிங் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித் குமாரை நேரில் சந்தித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அஜித் குமாரின் அடுத்த படமான, AK 63 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போகிறாரா? அதற்காகத்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்ததா என தெரியவில்லை. முன்னொரு பேட்டியில் AK 62 படத்தின் கதை அஜித்திற்கு பிடித்திருந்ததாகவும், தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காததால் தான், தன்னை நீக்கியதாகவும் விக்னேஷ் சிவன் கூறியது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு வேலை அஜித்தின் அடுத்த படத்தை விக்கி இயக்குவதாக இருந்தால், அதே கதையை எடுக்க போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்