விடுதலை 2 எப்படி இருக்கு? ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளியான விடுதலை- 2 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெற்றிமாறன் இயக்கிய இப்படம் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பலத்த எதிர்பார்ப்பை தூண்டியது. படம் A தணிக்கை சான்றிதழ் பெற்றிருந்தாலும், காலை முதல் பல திரையரங்குகளில் அரங்கம் நிரந்ததிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெயமோகனின் துணைவன் சிறுகதையின் அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வெற்றிமாறனின் அழுத்தமான திரைக்கதையை சிலாகித்து ரசிகர்கள் அவருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என அனுமானிக்கின்றனர். அதே நேரத்தில் விஜய் சேதுபதியின் தேர்ந்த நடிப்பையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர். X தளத்தில் இப்படத்தின் ரெவ்யூ என்ன என்பதை பற்றி ஒரு பார்வை!