Page Loader
உள்நாட்டு போரில் பாதிப்படைந்துள்ள அஜர்பைஜானில் அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு
கடந்த சில ஆண்டுகளாக தீவிரமான போரில் ஈடுபட்டுள்ள அர்மேனியா- அஜர்பைஜான் நாடுகளின் வரைபடம்

உள்நாட்டு போரில் பாதிப்படைந்துள்ள அஜர்பைஜானில் அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு

எழுதியவர் Srinath r
Oct 04, 2023
09:21 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித், திரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் போர் பதற்றம் மூண்டுள்ள அஜர்பைஜானில் நடைபெறுகிறது. துணிவு திரைப்படத்திற்கு பின் அஜித் எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்திருந்த நிலையில் விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இத்திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி பல மாதங்களான நிலையிலும் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு துபாயில் நடைபெறும் என தகவல் வெளியானது. ஆனால் தற்போது படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெறுவதாகவும், இதற்காக படக்குழு அங்கு சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாக அர்மேனியா-அஜர்பைஜான் இடையே நடந்துவரும் போர் தற்போது உச்சத்தில் இருக்கும் நேரத்தில் படக்குழு அங்கு சென்று இருப்பது ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

அஜர்பைஜான் நாட்டில் நடிகை திரிஷா