
துபாய் விமான நிலையத்தில் அஜித், திரிஷா; அஸிர்பைஜானில் தொடங்குகிறதா விடாமுயற்சி படப்பிடிப்பு?
செய்தி முன்னோட்டம்
நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. இதன் அறிவிப்பு வெளியாகி பலமாதங்கள் ஆன நிலையில், படத்தை துவங்கியதற்கான அறிகுறிகள் தென்படவே இல்லை.
படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் பற்றிய விவரங்களும் வெளியாகவில்லை என அஜித்தின் ரசிகர்கள் கவலை கொண்டிருக்கும் இந்த நேரத்தில், படக்குழுவினர், துபாய் ஏர்போர்ட்டில் தென்பட்டுள்ளனர்.
அஜித், த்ரிஷா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலரும் துபாய்க்கு விரைந்துள்ளனர். அங்கிருந்து படக்குழுவினர், அஸர்பைஜான் செல்லப்போவதாகவும், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
எனினும் படக்குழுவினரிடம் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, இரண்டு முறை அஜித் பைக் ட்ரிப் சென்று விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
துபாய் விமான நிலையத்தில் அஜித், திரிஷா
#AK and @trishtrashers at #Dubai Airport.. pic.twitter.com/uxl4d4Lkap
— Ramesh Bala (@rameshlaus) October 3, 2023