Page Loader
நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்; நிகில் நாயரின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு
விடாமுயற்சி

நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்; நிகில் நாயரின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 16, 2024
02:08 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. துணிவு படத்திற்கு பிறகு சிறிய இடைவெளி எடுத்த அஜித், அதன் பின்னர் மகிழ்திருமேனியின் இயக்கத்தில் தனது 62வது படமான விடாமுயற்சியில் நடிக்கத் தொடங்கினார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து படம் தொடர்பான போஸ்டர்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) படத்தில் நடிக்கிற நிகில் நாயரின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதைப் பார்த்த ரசிகர்கள் முதலில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு இதெல்லாம் வெளியிடுங்கள் என கோரி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

லைகா நிறுவனத்தின் அப்டேட்