Page Loader
'மனசிலாயோ': ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்தின் முதல் பாடல் வெளியானது

'மனசிலாயோ': ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்தின் முதல் பாடல் வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Sep 09, 2024
05:13 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள 'வேட்டையன்' அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடல், இன்று, செப்டம்பர் 9 அன்று மாலை 5 மணிக்கு வெளியாகுமென அறிவித்துள்ளனர். அந்த வகையில் சரியாக 5 மணிக்கு இப்பாடலை வெளியிட்டது தயாரிப்பு தரப்பு. பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே ட்ரெண்ட் ஆக துவங்கியது. சுவாரசியமாக இப்பாடலை மறைந்த பழம்பெரும் பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை AI மூலம் பயன்படுத்தியுள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்திருப்பது அனிருத்.

ட்விட்டர் அஞ்சல்

'மனசிலாயோ'