Page Loader
ஹாப்பி பர்த்டே ஃபஹத்: இரு பெரும் ஜாம்பவான்களுடன் ஃபஹத் ஃபாசில்
போஸ்டர் வெளியானதில் இருந்து இணையத்தில் வைரலாகி வருகிறது

ஹாப்பி பர்த்டே ஃபஹத்: இரு பெரும் ஜாம்பவான்களுடன் ஃபஹத் ஃபாசில்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 08, 2024
03:39 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் ஃபஹத் ஃபாசிலின் 42வது பிறந்த நாள் இன்று. இணையத்தில் அவரின் ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடி வரும் நேரத்தில், அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 'வேட்டையன்' படத்திலிருந்து அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது லைகா நிறுவனம். அதன் தொடர்ச்சியாக தற்போது மற்றுமொரு போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது. அதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பக்கமும், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் ஒரு பக்கமும், இடையில் பர்த்டே பாய் ஃபஹத் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது படக்குழு. 'வேட்டையன்' படத்தில் இந்த 3 பெரிய ஜாம்பவான் நடிகர்களும் முதன்முறையாக ஒன்றிணைந்து பணி செய்துள்ளனர். போஸ்டர் வெளியானதில் இருந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. TJ ஞானவேல் இயக்கியுள்ள இந்த படம், வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Happy birthday Fahadh!