
வேட்டையன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: மூன்று நாள் முடிவில் ரூ.145 கோடி மட்டுமே வசூல்
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாரான வேட்டையன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 10) திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
ஆயுத பூஜை, தசரா என வார இறுதி விடுமுறையை குறிவைத்து வழக்கமாக வெளியிடப்படும் வெள்ளிக்கிழமைக்கு ஒருநாள் முன்னதாகவே படம் திரையரங்குகளுக்கு வந்தது.
என்கவுட்டர், நீட் உள்ளிட்ட சமூக பிரச்சினைகளை மையமாக வைத்து இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் தயாரான இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் முதல் நாளில் மிகவும் சிறப்பாக இருந்தது.
எனினும், இரண்டாவது நாளில் சாற்றி சறுக்கிய நிலையில், முதல் இரண்டு நாட்களிலும் சேர்த்து உலகம் முழுவதும் மொத்தமாக சுமார் ரூ.110 கோடி மட்டுமே வசூல் செய்தது.
மூன்றாவது நாள்
வேட்டையன் மூன்றாவது நாள் வசூல்
இந்நிலையில், மூன்றாவது நாளான சனிக்கிழமையன்று படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் உலகம் முழுவதும் ரூ 35 கோடி மட்டுமே பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேட்டையன் படத்தின் ஒட்டுமொத்த வசூல் 3 நாட்களில் சுமார் ரூ.145 கோடி என்றும், தமிழகத்தில் இப்படம் 50 கோடியை தாண்டியுள்ளது என்றும் சினிட்ராக் தெரிவித்துள்ளது.
ஜெயிலர் படம் போல் மிகப்பெரும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வேட்டையன் படத்திற்கு, பாக்ஸ் ஆபிஸில் தொடர் வீழ்ச்சி அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுவதால், போட்ட பணத்தை எடுக்க முடியுமா என படத்தயாரிப்பு நிறுவனம் அச்சத்தில் உள்ளது.
இந்த படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.