யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெளியான வாடிவாசல் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஏற்கனவே தெரிவித்தது போல, தயாரிப்பாளர் தாணு இன்று 'வாடிவாசல்' திரைப்படத்தின் துவக்கம் பற்றிய அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
அதன்படி, வெற்றிமாறன்- சூர்யா இணையும் வாடிவாசல் படப்பிடிப்பு துவங்கி விட்டது.
"அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது" என்று தாணு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வாடிவாசல் திரைப்படம், 1959 இல் வெளியான சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா என்பவர் எழுதிய 'வாடிவாசல்' என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் திரைப்படம் ஆகும்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது#VetriMaaran @Suriya_offl#VaadiVaasal pic.twitter.com/ZPWfCDkF3C
— Kalaippuli S Thanu (@theVcreations) January 15, 2025
விவரங்கள்
வாடிவாசல் படத்தை பற்றிய விவரங்கள்
'வாடிவாசல்' திரைப்படம் வெற்றிமாறனின் 8வது இயக்கம் ஆகும்.
விடுதலை 2 வெளியீட்டிற்கு பின்னர் அவர் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், முதல்முறையாக சூர்யாவுடன் இணையும் திரைப்படம்.
இப்படத்திற்காக நடிகர் சூர்யா முறையை காளையை அடக்கும் பயிற்சியை மேற்கொண்டார் எனவும் கூறப்பட்டது. இப்படத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.
படத்தில் ஏறு தழுவுதல் காட்சிகளுக்காக லண்டனில் உள்ள ஒரு பிரபல கிராபிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது என்றும் படத்தில் CG காட்சிகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்றதாகவும் கூறப்படுகிறது.
சூர்யாவும் தற்போது 'ரெட்ரோ
படத்தின் படப்பிடிப்பை முடிவு செய்து விட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்திற்கு இசையமைக்கவுள்ளது ஜி.வி.பிரகாஷ் குமார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The Most Awaited Day Is Here 🔥#Vaadivaasal pic.twitter.com/P9pc1LOHPi
— Kolly Corner (@kollycorner) January 15, 2025